Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திற்கு வருகிற 20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல்

தமிழகத்திற்கு வருகிற 20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல்

By: vaithegi Thu, 17 Nov 2022 3:58:54 PM

தமிழகத்திற்கு வருகிற 20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: வருகிற 20-ஆம் தேதி வரை மழை .... தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்த நிலையில் கடந்த 10ம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் தமிழகத்தில் அதீத கனமழை பெய்ய தொடங்கியது.

மேலும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainfall,india meteorological department ,மழை, இந்திய வானிலை மையம்

இதையடுத்து இது தொடர்பாக வெளியான அறிக்கையில், வங்க கடலில் புதியதாக குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு நாளை மறுநாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு வருகிற 20-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Tags :