Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் இசைக்கப்பட்ட ஜெய்ஹோ பாடலை ரசித்த இந்திய பிரதமர்

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் இசைக்கப்பட்ட ஜெய்ஹோ பாடலை ரசித்த இந்திய பிரதமர்

By: Nagaraj Mon, 17 July 2023 7:22:30 PM

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் இசைக்கப்பட்ட ஜெய்ஹோ பாடலை ரசித்த இந்திய பிரதமர்

பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தின் போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஜெய் ஹோ’ என்ற ஆஸ்கார் விருது பெற்ற பாடலை இசைக்குழுவினர் நிகழ்த்தினர். அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் மோடியும் இந்தப் பாடலை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர்.

இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 13ம் தேதி (வியாழன்) பிரான்ஸ் சென்றார். அங்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

france,jay ho,party,president,song ,அதிபர், ஜெய் ஹோ, பாடல், பிரான்ஸ், விருந்து

இதையடுத்து பிரான்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். இதனிடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சார்பில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் நடிகர் மாதவனும் கலந்து கொண்டார். விருந்தின் போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ஜெய் ஹோ’ என்ற ஆஸ்கார் விருது பெற்ற பாடலை இசைக்குழுவினர் நிகழ்த்தினர். இம்மானுவேல் மேக்ரானும், பிரதமர் மோடியும் இந்தப் பாடலை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர்.

Tags :
|
|
|