Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனத்தில் இன்றும் தொடர்கிறது விசாரணை

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனத்தில் இன்றும் தொடர்கிறது விசாரணை

By: Nagaraj Thu, 07 July 2022 07:51:42 AM

நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனத்தில் இன்றும் தொடர்கிறது விசாரணை

அருப்புக்கோட்டை: இன்றும் விசாரணை நடக்கிறது…. நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே அலுவலகம் மற்றும் அந்நிறுவனர் செய்யாத்துரையின் வீடுகளில் வருமானவரித் துறையினர் நேற்றைய தினம் நள்ளிரவு வரை சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். மேற்கொண்டு இன்றும் விசாரணை தொடரும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை ஒப்பந்த நிறுவணமான எஸ்.பி.கே கண்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவணம், அருப்புக்கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகம் மதுரைசாலை ராகவேந்திரா நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வருமானவரித்துறை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

s b k company,documents,payment,investigation ,எஸ்.பி.கே. நிறுவனம், சோதனை, ஆவணங்கள், பணம், விசாரணை

சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்க நகை எடை போடும் தராசு, பணம் எண்ணும் இயந்திரம் என பல்வேறு உபகரணங்களுடன் 10 மணி நேரத்திற்கும் மேல் சோதனை நடைபெற்றது. செய்யாத்துரை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் என கூறப்படுவதால், தற்போது அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்திருந்தது.

இதுதொடர்பாக சோதனை நடைபெற்றதா அல்லது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு இங்கு ஏற்கனவே வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.

நேற்று செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை முடிவில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் பணம் குறித்தும் செய்யாத்துரை மகன் கருப்பசாமி உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் எஸ்.பி.கே நிறுவனம் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு சென்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற முதல்நாள் விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :