Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு

By: Nagaraj Tue, 21 July 2020 10:28:33 AM

அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு

உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனை... ஈரான் ராணுவ தளபதியை கொல்வதற்கு அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் விமான படை நடத்திய தாக்குதலில ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்நிலையில் காசிம் சுலைமானி கொலை வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க உளவு அதிகாரிகள் உள்பட 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்வதற்கு அமெரிக்காவிள் உளவு அமைப்பான சிஐஏவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர்.

qasim suleimani,affair,execution,execution ,காசிம் சுலைமானி, விவகாரம், மரண தண்டனை, நிறைவேற்றம்

மவ்சாவி மஜித் மீது ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மவ்சாவி மஜித்துக்கு திங்கள்கிழமை (நேற்று) மரண தண்டனையை (தூக்கிலிட்டு) ஈரான் நிறைவேற்றியது. இதனை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது. ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Tags :
|