காஸா நோக்கி விரைவாக முன்னேறுகிறதாம் இஸ்ரேல் ராணுவம்
By: Nagaraj Thu, 02 Nov 2023 10:47:28 PM
காஸா: காஸா மீது வான் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை சாதகமாக்கிக்கொண்டு தரைவழியில் இஸ்ரேல் ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தியபடியே படிப்படியாக முன்னேறி செல்கின்றனர்.
தரைவழித் தாக்குதலின் போது ஹமாஸ் போராளிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர்கள் 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
வடக்கு காஸாவில் வசித்துவரும் பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தியது.
தற்போது அந்த இரு பகுதிகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கும் வகையில் படைகளை குவித்து வருகிறது. நாளுக்கு நாள் தரைவழியாக காஸா நகரை நோக்கி இஸ்ரேல் படைகள் முன்னேறுகின்றன.
Tags :
advance |
assault |