Advertisement

கச்சா எண்ணெய் கடலில் கடந்த விவகாரம்... அமைச்சர் தகவல்

By: Nagaraj Thu, 09 Mar 2023 10:54:26 AM

கச்சா எண்ணெய் கடலில் கடந்த விவகாரம்... அமைச்சர் தகவல்

நாகை: அமைச்சர் தகவல்... நாகை மாவட்டம் பட்டினச்சேரி கடற்கரையில் கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.எல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மீனவர்களை சந்தித்து பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.

minister,permanent,dismissal,crude oil,marine ,அமைச்சர், நிரந்தரமாக, அகற்றப்படும், கச்சா எண்ணெய், கடல்

பின்னர் பேட்டியளித்த அவர், கச்சா எண்ணெய் கடலில் கலந்ததால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசை கண்டுபிடிக்க, சென்னையில் இருந்து வந்த 3 ஆராய்ச்சியாளர்கள் மாதிரிகளை சேகரித்து சென்றிருப்பதாக குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் குழாயை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags :