Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பில்கிஸ் பானு வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதி

பில்கிஸ் பானு வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதி

By: Nagaraj Thu, 15 Dec 2022 11:46:58 AM

பில்கிஸ் பானு வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதி

புதுடெல்லி: நீதிபதி பேலா திரிவேதி விலகினார்... குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பேலா திரிவேதி நேற்று திடீரென விலகினார்.

இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் நிலை உருவானது. நீதிபதி விலகியதையடுத்து புதிய அமர்வு அமைக்கப்பட்டு அதன்பிறகே விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

justice pela trivedi,new delhi, ,நீதிபதி பேலா திரிவேதி, புதுடெல்லி, விசாரணை

இந்நிலையில், பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பேலா திரிவேதி விலகியதால், புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, “மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும். தயவு செய்து ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பக் குறிப்பிடாதீர்கள் மிகவும் எரிச்சலூட்டுகிறது” என்றார்.

Tags :