Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்

By: Nagaraj Wed, 11 Jan 2023 10:18:25 PM

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் உடல்நலக்குறைவால் காலமானார்

ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் கான்ஸ்டன்டைன் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 82வது வயதில் காலமானார்.

கான்ஸ்டன்டைன் II 1964 முதல் 1973 வரை கிரீஸின் ஏதென்ஸின் மன்னராக இருந்தார். அவர் தனது 23 வயதில் கிரீஸின் சிம்மாசனத்தில் ஏறினார்.
1967 இல், கிரீஸில் முடியாட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் கான்ஸ்டன்டைன் II நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர், 1974 இல், முடியாட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஜனநாயகம் தழைத்தோங்கும் போது நாடு திரும்பினார்.

death,ill health,king of greece, ,உடல்நிலை குறைவு, கிரீஸ் மன்னர், மரணம், ஊழியர்கள்

இதற்கிடையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் இரண்டாம் கான்ஸ்டன்டைன் இன்று காலமானார். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 82வது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாம் கான்ஸ்டன்டைன் இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags :
|