Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்படும்

தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்படும்

By: Nagaraj Sun, 11 Sept 2022 10:35:50 AM

தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்படும்

புதுடில்லி: பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்படும்... ‘காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவி தோ்தலில் வாக்களிக்கவிருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்படும்’ என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

‘தலைவா் தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் தில்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள மத்திய தோ்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்படும் 9,000 போ் கொண்ட பிரதிநிதிகள் (வாக்காளா்) பட்டியலை பாா்த்துக்கொள்ளலாம்’ என்று அக் கட்சியின் மத்திய தோ்தல் ஆணையத் தலைவா் மதுசூதன் மிஸ்திரி கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் தலைவா் பதவிக்கு அக்டோபா் 17-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட உள்ளது. தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் செப்டம்பா் 24-ஆம் தேதிமுதல் 30-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த நிலையில், ‘கட்சியின் வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டும். அப்போதுதான் தோ்தலில் வெளிப்படைத்தன்மை இருக்கும்’ என்று கட்சியின் மூத்த தலைவா்களான மனீஷ் திவாரி, சசி தரூா் உள்ளிட்டோா் கருத்து தெரிவித்தனா்.

twitter,list,satisfaction,congress party,leader,choice ,டிவிட்டர், பட்டியல், திருப்தி, காங்கிரஸ் கட்சி, தலைவர், தேர்வு

அதனைத் தொடா்ந்து இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக சசி தரூா் உள்ளிட்டோருக்கு மதுசூதன் மிஸ்திரி எழுதியுள்ள கடிதத்தில், ‘தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் தலைமை தோ்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது, தோ்தலில் வாக்களிக்க உள்ள ஒட்டுமொத்த பிரதிநிதிகளின் பட்டியலையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அந்தப் பட்டியலிலிருந்து தங்களுடைய வேட்புமனுவில் கையொப்பமிடுவதற்கான 10 ஆதரவாளா்களை போட்டியாளா்கள் தோ்வு செய்துகொள்ள முடியும்’ என்று தெரிவித்துள்ளாா். ‘இந்தப் பதிலால் திருப்தியடைந்திருப்பதாக’ சசி தரூா், காா்த்தி சிதம்பரம் ஆகியோா் அந்தக் கடிதத்தையும் தங்களின் ட்விட்டா் பக்கத்தில் இணைத்து பதிவிட்டுள்ளனா்.

Tags :
|
|