Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்கிற பட்டியல் வெளியீடு

அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்கிற பட்டியல் வெளியீடு

By: vaithegi Sun, 05 Nov 2023 3:44:30 PM

அடுத்த 2 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்கிற பட்டியல் வெளியீடு

சென்னை: வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதனால் இன்று தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை திங்கட்கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது

heavy rain,nilgiris,coimbatore ,கனமழை , நீலகிரி ,கோயம்புத்தூர்


இதனையடுத்து, நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும்

மேலும் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags :