Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஹரியானா மாநிலத்தில் படையெடுத்து வந்து மக்களை அவதிக்குள்ளாக்கிய வெட்டுக்கிளிகள்

ஹரியானா மாநிலத்தில் படையெடுத்து வந்து மக்களை அவதிக்குள்ளாக்கிய வெட்டுக்கிளிகள்

By: Nagaraj Sat, 27 June 2020 1:57:24 PM

ஹரியானா மாநிலத்தில் படையெடுத்து வந்து மக்களை அவதிக்குள்ளாக்கிய வெட்டுக்கிளிகள்

ஹரியானாவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் மக்கள் பெரிய அளவில் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராமின் பாலம் விஹார் பகுயில் வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 3 கி.மீ நீளமுள்ள வெட்டுக்கிளிகளின் திரள் குருகிராமைத் தாக்கியுள்ளது.

இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இது ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் டெல்லிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

locusts,gurugram,people are a big problem,delhi ,வெட்டுக்கிளிகள், குருகிராம், மக்கள் பெரும் அவதி, டெல்லி

லட்சக்கணக்கில் பறந்து வந்து சில மணி நேரங்களில் ஏராளமான பயிர்களை சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கு முன்பே குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைநகர் டெல்லிக்கு அருகே குருகிராம் பகுதிக்குள் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது, பக்கத்து மாநில மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதல் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சில மாநிலங்களின் பகுதிகளை ஒரு மாதத்திற்கும் மேலாக பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :