Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்

அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்

By: vaithegi Sat, 22 Oct 2022 10:16:55 AM

அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும்

சென்னை:அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்பதால் இன்றும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்னும் அதே இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று வலுப்பெறலாம் எனவும் அதனால் வங்கக் கடல் பகுதி மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

depression,andaman ,காற்றழுத்த தாழ்வு மண்டலம், அந்தமான்

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும், அதன் பின் நாளை (அக். 23) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும்.

அதன் பின் வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற அக். 24 ஆம் தேதி புயலாக மாறும்.அதை தொடர்ந்து அக். 25 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசி கடற்கரை நோக்கி நகரும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :