Advertisement

இன்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ் பகுதி தாமதமாகும்

By: vaithegi Tue, 17 Oct 2023 11:02:50 AM

இன்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ் பகுதி தாமதமாகும்


சென்னை: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

low pressure area,meteorological center ,காற்றழுத்த தாழ் பகுதி,வானிலை மையம்

இந்நிலையில் தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ் பகுதி தாமதம் ஆகியுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எஎன்று ன கணிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக்கடலில் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :