Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் மார்ச் மாதத்திற்கு பின்னர் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை

கனடாவில் மார்ச் மாதத்திற்கு பின்னர் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை

By: Nagaraj Tue, 23 June 2020 2:57:00 PM

கனடாவில் மார்ச் மாதத்திற்கு பின்னர் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை

குறைந்த உயிரிழப்பு... கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நாளொன்றுக்கான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 300பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு (5பேர் உயிரிழப்பு) பிறகு குறைந்த அளவிலான உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

canada,worry,death,low ,
கனடா, கவலைக்கிடம், உயிரிழப்பு, குறைந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18ஆவது நாடாக மாறியுள்ள கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 1,637பேர் பாதிப்படைந்ததோடு, 8,436பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,867பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 64,334பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,048பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|
|