Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை இதுதான்... உக்ரைன் பாதுகாப்பு உயர் அதிகாரி திட்டவட்டம்

பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை இதுதான்... உக்ரைன் பாதுகாப்பு உயர் அதிகாரி திட்டவட்டம்

By: Nagaraj Wed, 09 Nov 2022 4:33:52 PM

பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை இதுதான்... உக்ரைன் பாதுகாப்பு உயர் அதிகாரி திட்டவட்டம்

உக்ரைன்: பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை இதுதான்... கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ukraine,security authority,negotiations,borders,restoration ,உக்ரைன், பாதுகாப்பு அதிகாரி, பேச்சுவார்த்தை, எல்லைகள், மீட்டெடுப்பு

பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிவ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.


மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதாகும் என்றும் உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

உக்ரைனின் எல்லைகளை மீட்டெடுக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரேனிய ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :