Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவோயிஸ்டுகள் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டம்

மாவோயிஸ்டுகள் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டம்

By: Karunakaran Sat, 12 Dec 2020 1:48:20 PM

மாவோயிஸ்டுகள் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்கு புறப்பட்டு சென்றனர். டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

maoists,infiltrate,peasant struggle,violence ,மாவோயிஸ்டுகள், ஊடுருவல், விவசாயிகள் போராட்டம், வன்முறை

இந்நிலையில் இன்று விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டன. அதுபோல சுங்க சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மேலும் தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அடுத்தக்கட்டமாக ரெயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன.

Tags :