Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது... ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது... ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

By: Nagaraj Fri, 09 June 2023 06:03:39 AM

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது... ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு

பாட்னா: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லலன் சிங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்கள் மற்றும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நிதிஷ் குமாரின் முயற்சிக்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில், வரும் 12ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்திருந்தது. ஆனால் அன்றைய தினம் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

announcement,date,june 23,meeting,opposition,patna,united janata dal, ,அறிவிப்பு, எதிர்கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம், கூட்டம், ஜூன் 23, தேதி, பாட்னா

மேலும், அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, வரும் 18ம் தேதி நாடு திரும்புவதால், கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லலன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர். டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

சரத் பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என்று லாலன் சிங் கூறினார். இந்த கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசம் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags :
|
|