Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை, தானேயில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ....ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை, தானேயில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ....ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

By: vaithegi Tue, 21 June 2022 11:25:45 AM

மும்பை, தானேயில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ....ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை: மும்பையில் கடந்த 11-ந் தேதியில் இருந்து பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் ஒரு சில இடங்களில் லேசான மழை மட்டும் பெய்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மும்பை நகரில் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் மட்டும் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரில் நேற்று காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை நகர் பகுதியில் 4.3 செ.மீ. மழையும், கிழக்கு புறநகரில் 1 செ.மீ., மேற்கு புறநகரில் 1.5 செ.மீ. மழையும் பதிவாகியது.

இந்நிலையில் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆரஞ்சு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தானே, ராய்காட்டிலும் இன்று மிகவும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

meteorological center,monsoon,orange warning , வானிலை ஆய்வு மையம்,பருவமழை ,ஆரஞ்சு எச்சரிக்கை

இதேபோல வரும் வெள்ளிக்கிழமை வரை பால்கர், தானே, ராய்காட்டில் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், அசாமில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் அசாமில் சமீபத்திய மழை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 72 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேகாலயாவில் கடந்த 2 மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுa

Tags :