Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவிப்பு

நாளை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:06:28 AM

நாளை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் கோடைகாலத்தின் வெப்பத்தை தணிக்கும் வகையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் வெப்பம் அதிக அளவில் உள்ளது. கோடைகாலத்தின் ஆரம்ப நாட்களான மார்ச் மாதத்திலேயே தமிழகத்தில் வெப்பநிலை சதத்தை தாண்டியது. இதனால் போக போக வெப்பம் அதிகரிக்கும் என மக்கள் பெரும் பீதியில் இருந்தனர்.

rainy,tamil,rain,tamilnadu,weather,heavy rain,notification,heat ,மழை ,தமிழகம், வானிலை, கனமழை, அறிவிப்பு, வெப்பம்

மேலும், வானிலை ஆய்வு மையமும், வழக்கத்தை விட நடப்பாண்டில் மார்ச் முதல் ஜூன் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கோடை வெயிலுக்கு நடுநடுவே மழை பொழிந்து மக்களை மகிழ்வித்து வருகிறது.

அந்த வகையில் நாளை 4ம் தேதி வரை தமிழகத்தின் சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|