Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்னிந்திய கடல்பகுதிகளில் இன்று முதல் ஜூன் 5ம் தேதி வரை சூறாவளி காற்று வீசவும் .. வானிலை மையம் எச்சரிக்கை

தென்னிந்திய கடல்பகுதிகளில் இன்று முதல் ஜூன் 5ம் தேதி வரை சூறாவளி காற்று வீசவும் .. வானிலை மையம் எச்சரிக்கை

By: vaithegi Thu, 01 June 2023 3:09:38 PM

தென்னிந்திய கடல்பகுதிகளில் இன்று முதல் ஜூன் 5ம் தேதி வரை சூறாவளி காற்று வீசவும் ..  வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் வருகிற ஜூன் 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

cyclone,meteorological centre ,சூறாவளி ,வானிலை மையம்

இதை தொடர்ந்து இன்றும், நாளையும் கேரள கர்நாடகா கடலோரப் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று ஆனது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்திலும், தெற்கு இலங்கைய ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 65 கிமீ வேகத்தில் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து வருகிற ஜூன் ஐந்தாம் தேதி வரை மீனவர்களுக்கான எச்சரிப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :