Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஒடிசா பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By: vaithegi Mon, 08 Aug 2022 6:09:27 PM

ஒடிசா பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஒடிசா : தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துகொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தான் கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து கொண்டு வருகிறது.

meteorological centre,odisha,heavy rain ,வானிலை ஆய்வு மையம் ,ஒடிசா ,கனமழை


இதையடுத்து வடமேற்கு வங்க கடல் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் உண்டான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு பகுதியில் நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்தவகையில், தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவெடுத்துள்ளது. இதனால், ஒடிசா பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தை தொடர்ந்து சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags :
|