Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா பின்பற்றிய வழிமுறையை நடைமுறைப்படுத்த முடியாது; மஹாராஷ்டிரா அரசு பதில் மனுதாக்கல்

கேரளா பின்பற்றிய வழிமுறையை நடைமுறைப்படுத்த முடியாது; மஹாராஷ்டிரா அரசு பதில் மனுதாக்கல்

By: Nagaraj Tue, 19 May 2020 10:43:19 AM

கேரளா பின்பற்றிய வழிமுறையை நடைமுறைப்படுத்த முடியாது; மஹாராஷ்டிரா அரசு பதில் மனுதாக்கல்

மஹாராஷ்டிராவில் நிலைமை வேறு விதமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கேரளா பின்பற்றிய வழிமுறைகளை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு சார்பில் மும்பை நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச்சில், மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தான், முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இரு மாநிலங்களிலும், தொற்று எண்ணிக்கை, ஒரே மாதிரியாக உயர்ந்தபடியே வந்தது. கேரள அரசு, துரித நடவடிக்கை எடுத்து பாதிப்பை குறைத்து காட்டியது.

reply petition,kerala inquiry,maharashtra,inquiry ,பதில் மனு, கேரளா வழிமுறை, மஹாராஷ்டிரா, விசாரணை

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பின்பற்றிய நடைமுறையை மஹாராஷ்டிரா அரசு பின்பற்ற வேண்டும். இதற்காக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் சுபாஷ் ஸன்வார் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு மஹராஷ்டிரா அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

reply petition,kerala inquiry,maharashtra,inquiry ,பதில் மனு, கேரளா வழிமுறை, மஹாராஷ்டிரா, விசாரணை

கொரோனா வைரசை கட்டுப்படுத்த, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறிய விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம். மஹாராஷ்டிராவில் நிலைமை வேறு விதமாக உள்ளது. எனவே கேரளா பின்பற்றிய வழிமுறைகளை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது.

எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடக்க உள்ளது.

Tags :