Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று இயல்பு நிலையை விட அதிகரிக்க இருக்கும் வெயில் .... பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

இன்று இயல்பு நிலையை விட அதிகரிக்க இருக்கும் வெயில் .... பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

By: vaithegi Tue, 16 May 2023 09:44:14 AM

இன்று இயல்பு நிலையை விட அதிகரிக்க இருக்கும் வெயில்    ....  பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பு இருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

இதனை தூது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

minister,veil,begged ,அமைச்சர் ,வெயில்    ,வேண்டுகோள்

இந்த நிலையில் இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , "தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உயர்ந்து வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். அவசியமான பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீரை கையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ் (ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தவும்.

மேலும் இந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவை உண்ணவேண்டும். காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்க வேண்டும். உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்பொழுது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் மதிய வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்கவும்" என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|