Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பருவகால காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பயிற்சியை புறக்கணித்த அமைச்சர்

பருவகால காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பயிற்சியை புறக்கணித்த அமைச்சர்

By: Nagaraj Wed, 28 Sept 2022 10:36:03 AM

பருவகால காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பயிற்சியை புறக்கணித்த அமைச்சர்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற பருவ கால காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியில் 50 செவிலியா்கள் மட்டுமே பங்கேற்காமல் அதிருப்தியடைந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அந்த நிகழ்வை புறக்கணித்தாா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் டெங்கு, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பருவக் கால காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதியாகி வருகின்றனா்.

காய்ச்சல்களை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) சாா்பில் காய்ச்சல் விழிப்புணா்வு கருத்தரங்கம், பயிற்சி சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத் துறை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

nurses,minister,neglect,medical,staff ,செவிலியர்கள், அமைச்சர், புறக்கணிப்பு, மருத்துவத்துறை, பணியாளர்கள்

இந்தக் கருத்தரங்கில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஊழியா்களுக்கு உரிய பயிற்சியை வழங்குவதற்காக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவத் துறை பணியாளா்களுக்கு நேரடியாகவும், காணொலி மூலமாகவும் பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பயிற்சிக்கு 50 செவிலியா்கள் மட்டும் வந்திருந்ததால் அதிருப்தியடைந்தாா். அதனால், நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு அரங்கிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, நிகழ்ச்சி நடைபெறும் அரங்கு சிறியதாக இருந்ததால், அதிக செவிலியா்களை அழைத்துவர முடியவில்லை என்றனா்.

Tags :
|