Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு ..நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவிப்பு

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு ..நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Wed, 20 July 2022 5:42:43 PM

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு ..நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவிப்பு

சென்னை: தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை ஒட்டி இன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது, நிபுணர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த மருத்துவமனையில் மட்டுமே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 நபர்களுக்கு செயற்கை கை, கால் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் கை விரல்கள் துண்டிக்கப்படுபவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது.

இதனைஅடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் மிக முக்கியமான நோக்கமாகும். அதற்கான நடவடிக்கைகளும் பல தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

neet exam,m.subramanian,excluded ,நீட் தேர்வு ,மா.சுப்பிரமணியன்,விலக்கு

மேலும், நீட் தேர்வு குறித்தான குறிப்புகள் கவர்னருக்கு அனுப்பப்பட்டு தமிழக அரசின் சட்டத்துறைக்கு இந்த வாரம் தான் கிடைக்க பெற்றுள்ளது. மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற்றே தீர வேண்டும் என்பதில் அரசு மிக உறுதியாக இருக்கிறது.

இத்தீர்மானத்தில் இருந்து தமிழக அரசு எப்பொழுதுமே பின் வாங்காது எனவும், நீட் தேர்விற்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட ரீதியாக பதில்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தீர்மானத்தின் மூலமாக தமிழக மாணவர்களின் நலன் காக்கப்படும் எனவும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மட்டும் விடாப்பிடியாக இருக்கிறோம் எயாரும் சட்டப்பூர்வமான கோப்புகளுக்கு பதில் தயாரித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.

Tags :