Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 4000 Acகாலிப்பணியிடங்களை நிரப்பப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 4000 Acகாலிப்பணியிடங்களை நிரப்பப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

By: vaithegi Wed, 31 Aug 2022 4:18:54 PM

தமிழகத்தில்  4000 acகாலிப்பணியிடங்களை நிரப்பப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வின் முதல் தாள் வருகிற செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

எனவே இதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

minister of higher education,chief minister of tamil nadu , உயர் கல்வித்துறை அமைச்சர், தமிழக முதல்வர்

இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் IAS மற்றும் IPS உள்ளிட்ட போட்டித்தேர்வுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக பாடத்திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு மாநில கல்வி கொள்கை வகுக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1895 பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி இந்த காலிப்பணியிடங்கள் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :