Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழக முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவிப்பு

By: vaithegi Wed, 22 June 2022 6:30:05 PM

தமிழக முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவிப்பு

தமிழகம்: இந்தியாவில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தைத் தாண்டியுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

department of public welfare,corona,regulations , மக்கள் நல்வாழ்வுத் துறை,கொரோனா ,கட்டுப்பாடுகள்


பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது.
எனவே இவை அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ( மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி ) கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கி உள்ளார்.

Tags :
|