Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11ம் வகுப்பு மாணவர்களான பொதுத் தேர்வுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

11ம் வகுப்பு மாணவர்களான பொதுத் தேர்வுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Thu, 23 June 2022 11:59:45 AM

11ம் வகுப்பு மாணவர்களான  பொதுத் தேர்வுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகாமையில் உள்ள பில்லர் மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான மேம்பாட்டு பயிற்சியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் தமிழக முதல்வர் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு விரைவு தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்

அதுமட்டுமின்றி, வருகிற 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் உயர்வான இடத்திற்கு செல்வதற்காக தமிழகம் பல நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார்.

school education,general examination,students ,பள்ளிக்கல்வித்துறை ,பொதுத்தேர்வு ,மாணவர்கள்

மேலும், தொடக்க பள்ளிகளில் கட்டிடங்கள் சீரமைக்க பல நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை சேர்ப்பதற்கு படையெடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, பள்ளிகளில் வழங்கப்படும் 10 விதமான இலவச பொருட்களை யாரும் விலைக்கு விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

இந்த வருடம் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதால், அதிகமான ஆசிரியர்கள் இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், 11ம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று அமைச்சர் கூறினார்.

Tags :