Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்

By: Nagaraj Thu, 04 Aug 2022 9:32:37 PM

ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் மாணவிகளை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்லும் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தனது பாராட்டுக்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து தெரிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இஸ்ரோ சார்பில் எஸ் எஸ் எல் வி ராக்கெட் ஏழாம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் எஸ் எஸ் எல் வி செயற்கைகோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சியை கையாண்டுள்ளது.

நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கைக் கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த நான்கு மாதமாக பள்ளியைச் சேர்ந்த பவதாரணி, ஸ்வேதா, ஏஞ்சல் யசோதா தேவி உட்பட பத்து மாணவிகள் ஆசிரியர்களின் உதவியோடு இஸ்ரோ சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆர்டினோ ஐஇடி என்ற மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலமாக இஸ்ரோ உதவியது. அனைவரின் உதவியோடு மாணவிகள் இந்த மென்பொருளை தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர். திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் தயாரித்த இந்த மென்பொருள் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான ஆய்வில் மாணவிகள் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

software,product,greeting,program,students,minister ,மென்பொருள், தயாரிப்பு, வாழ்த்து, நிகழ்ச்சி, மாணவிகள், அமைச்சர்

இதனைத் தொடர்ந்து மாணவிகள் தயார் செய்த மென்பொருள் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 75 பள்ளிகளில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்ட மென்பொருள் மூலம் வருகிற ஏழாம் தேதி எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிசெயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு மாணவிகள் 10 பேரும் நாளை திருமங்கலத்தில் இருந்து சென்னை சென்று சென்னையிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டு செல்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவிகள், இந்தியா முழுவதும் 75 பள்ளி மாணவிகள் தயார் செய்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதற்கான மென்பொருள் தயாரிப்பில் தாங்களும் ஈடுபட்டது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி என தெரிவித்தனர்.

இந்நிலையில் ராக்கெட் ஏவு தளத்திற்கு செல்லும் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி வாழ்த்து தெரிவித்தார்.

Tags :