Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் .. அமைச்சர்

கோயில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் .. அமைச்சர்

By: vaithegi Mon, 26 June 2023 1:09:03 PM

கோயில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் ..  அமைச்சர்

சென்னை: ஈரோடு கதிரம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதில், ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றியும், டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டறிந்து உள்ளோம்.

கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

tasmac,temples,schools ,டாஸ்மாக் ,கோயில்கள், பள்ளிக்கூடங்கள்

ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தின் விலையை விட ரூ.10 அதிகம் வைத்து விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மூடப்பட்டு உள்ள 500 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள், வேறு கடைகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

டாஸ்மாக் விற்பனையை உயரத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. நடைபெற்றுக் கொண்டிருக்கும் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். டாஸ்மாக்கில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கிறோம். அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார்.


Tags :
|