Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 32 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்

32 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்

By: Nagaraj Sat, 12 Aug 2023 5:19:40 PM

32 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்

கோவை: கோவைப்பகுதியில் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்.

கோவை மைல்கல் முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

road works,inaugurated by minister,coimbatore metro ,சாலைப்பணிகள், தொடக்கி வைத்தார், அமைச்சர், கோயம்புத்தூர் மெட்ரோ

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை ரூ. 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக ரூ. 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவையில் சுற்றுவட்ட சாலை அறிவிப்பை 2007-ம்ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். 2009 ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.

Tags :