Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிபப்பு

லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிபப்பு

By: Karunakaran Mon, 24 Aug 2020 5:48:09 PM

லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிபப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியா முழுவதும் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு, லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

corona virus,ministry of road transport,license,vehicle documents ,கொரோனா வைரஸ், சாலை போக்குவரத்து அமைச்சகம், உரிமம், வாகன ஆவணங்கள்

லைசென்ஸ் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசால் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :