Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி மாயம்; கேரளாவில் பரபரப்பு

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி மாயம்; கேரளாவில் பரபரப்பு

By: Nagaraj Fri, 17 July 2020 9:00:08 PM

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் தூதரகத்தில் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி மாயம்; கேரளாவில் பரபரப்பு

தூதரக பாதுகாப்பு அதிகாரி மாயம்... ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர், கடந்த இரண்டு நாட்களாக அவர் காணவில்லை என்று புகார் கூறியுள்ளனர். கேரள அரசை உலுக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் இது ஒரு புதிய திருப்பத்தை கொடுத்துள்ளது.

காணாமல் போன ஜெயா கோஷின் உறவினர், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை அழைத்ததாகவும், அதே நேரத்தில் தனக்கு சில அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருக்கும் தங்கம் குறித்து தான் சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என தன்னை சந்தேகிப்பதாகவும் ஜெயா கோஷ் கூறியதாக தெரிவித்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அஞ்சுகிறார்கள்.

kerala,gold smuggling,case,consular officer,magic ,கேரளா, தங்கக் கடத்தல், வழக்கு, தூதரக அதிகாரி, மாயம்

முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அவரை தடுத்து வைத்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர். கோஷ் காணாமல் போவதற்கு முன்பு, அவர் தனது சேவை துப்பாக்கியை ஒப்படைத்ததாக அவரது மைத்துனர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், ஜூலை 5’ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தூதரக அலுவலகத்தின் அதிகாரி பெயரில் வந்த ஒரு சரக்கிலிருந்து 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட நாளில் பல முறை அவரை அழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள அரசின் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தூதரக பாதுகாப்பு அதிகாரி மாயமாகியுள்ளது புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

Tags :
|
|