Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடையை மூட கூறி தரையில் விழுந்து வணங்கிய எம்எல்ஏ

டாஸ்மாக் கடையை மூட கூறி தரையில் விழுந்து வணங்கிய எம்எல்ஏ

By: Nagaraj Tue, 08 Nov 2022 10:26:12 AM

டாஸ்மாக் கடையை மூட கூறி தரையில் விழுந்து வணங்கிய எம்எல்ஏ

சேலம்: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ், டாஸ்மாக் பணியாளர்கள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து டாஸ்மாக் கடையை மூடுமாறு கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது


முத்துநாய்கன்பட்டியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் அருள் ராமதாஸ் தலைமையில் பொதுமக்கள் 5,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ,டாஸ்மாக் கடை, மூடுங்கள், வலியுறுத்தல், குறிப்பிடத்தக்கது, சேலம்

ஒரு மாதத்தில் கடையை மூடுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு மாதமாகியும் மூடப்படாததால் அப்பகுதி பெண்களுடன் அங்கு சென்ற அருள் ராமதாஸ், கடையை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து தரையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கடையை மூட வலியுறுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்எல்ஏவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


பெண்களின் நெடுநாளைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எப்படியோ டாஸ்மாக் கடை அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டால் எம்எல்ஏ அருள்ராமதாசின் மதிப்பும், மரியாதையும் இன்னும் உயர்ந்து விடும் என்பதும் உண்மையிலும் உண்மையே.

Tags :