Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலையை உடைத்த கும்பல்

பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலையை உடைத்த கும்பல்

By: Nagaraj Mon, 20 July 2020 10:12:23 AM

பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலையை உடைத்த கும்பல்

பாகிஸ்தானில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை முழுவதுமாக வெளியே எடுக்கப்படாத நிலையில் ஒரு கும்பல் அதனை அடித்து நொறுக்கி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் 1700 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை அடித்து உடைக்கப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் மர்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில், அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது காந்தார நாகரிகத்தில் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.

strong condemnation,buddha statue,gang,4 arrested,smashed ,கடும் கண்டனம், புத்தர் சிலை, கும்பல், 4 பேர் கைது, நொறுக்கியது

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் மதத் தலைவரின் வலியுறுத்தலின் பேரில், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி புத்தர் சிலையை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் சிலையை முழுவதுமாக வெளியே எடுக்காத நிலையில், சம்மட்டியை கொண்டு சிலையை சேதப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Tags :
|