Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளை அடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசு; ராகுல் கடும் விமர்சனம்

விவசாயிகளை அடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசு; ராகுல் கடும் விமர்சனம்

By: Nagaraj Sun, 20 Sept 2020 4:00:07 PM

விவசாயிகளை அடிமைகளாக மாற்ற நினைக்கும் மோடி அரசு; ராகுல் கடும் விமர்சனம்

முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

rahul gandhi,farmers,employers,prime minister,central government ,ராகுல் காந்தி, விவசாயிகள், முதலாளிகள், பிரதமர், மத்திய அரசு

இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் இன்று மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

மோடி அரசாங்கத்தால் விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தில் குறைந்த ஆதரவு விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி நினைக்கிறார். மத்திய அரசின் இந்த திட்டம் வெற்றி பெற நாடு அனுமதிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :