Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்ட காலத்திற்கு அடுத்த வாரமே நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்

மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்ட காலத்திற்கு அடுத்த வாரமே நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்

By: Karunakaran Sat, 19 Sept 2020 9:38:17 PM

மழைக்கால கூட்டத்தொடரை திட்டமிட்ட காலத்திற்கு அடுத்த வாரமே நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்

வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும். தற்போது, கொரோனா வைரஸ் பரவலால் கூட்டத்தொடர் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தொடர் எந்த விடுமுறையும் இல்லாமல் வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் கூட்டத்தொடரில் பங்கேற்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

monsoon meeting,report,scheduled,next week ,பருவமழை கூட்டம், அறிக்கை, திட்டமிடப்பட்டுள்ளது, அடுத்த வாரம்

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் மத்திய மந்திர்களான நிதின் கட்காரி, பிரஹெல்ட் சிங் பட்டேல், ராஜ்ய சபா எம்.பி.யான வினேய் சஹஷ்ரபதி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாராளுமன்ற செயலக அதிகாரிகளுக்கும், கூட்டத்தொடரை ஒளிபரப்பு செய்யும் பத்திரிக்கையாளர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, கூட்டத்தொடரில் பங்கேற்ற எம்.பி.க்கள் பலருக்கும் கொரோனா பரவலாம் என அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் உத்தரவின்படி தொழில் ஆலோசனை கவுன்சிலை இன்று கூட்டி, பாராளுமன்ற கூட்டத்தொடரை வரும் வியாழக்கிழமையே முடித்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவுக்கு வரலாம்.

Tags :
|