Advertisement

ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்த அறவழிப்போராட்டம்

By: Nagaraj Thu, 13 Aug 2020 7:31:18 PM

ஆங்கிலேயர்களை ஆட்டம் காண வைத்த அறவழிப்போராட்டம்

காந்தியடிகள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டவர். இவருடன் சேர்ந்து நாடு முழுவதும் பல தலைவர்கள் அவர்களது பங்களிப்பை அளித்தனர்.

“ஒத்துழையாமை இயக்கம்”, “வெள்ளையனே வெளியேறு”, “சட்ட மறுப்பு” மற்றும் “உப்புசத்தியா கிரகம்” போன்ற பல போராட்டங்களை மக்கள் ஒன்றிணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடத்தினர். இந்திய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுவீச்சில் சுதந்திரத்திற்காக போராடினர். இந்தியா முழுவதும் சுதந்திர எண்ணம் காட்டுத்தீ போன்று மக்களின் மனதில் பரவ ஆரம்பித்தது.

அதன் விளைவாக ஆங்கிலேயர்கள் மெல்ல மெல்ல தங்களது வணிக நிறுவனங்களை களைத்து அவர்களின் ஆதிக்கத்தினை தளர்த்த ஆரம்பித்தனர். மக்களின் ஒற்றுமை காரணமாக அவர்களை கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்ச தொடங்கினர். மேலும் அறவழி போராட்டத்தின் நிலை உச்சம் அடைந்ததனை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க முன்வந்தனர்.

freedom struggle,mountbatten,march,troop ,சுதந்திர போராட்டம், மவுண்ட்பேட்டன், அணிவகுப்பு, முப்படை

இந்தியாவிற்கான சுதந்திர அறிக்கையினை வெளிட்டவர் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன். இந்தியாவில் நடந்த தொடர் போராட்டங்களால் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து வெளியேறலாம் என்று முடிவெடுத்து முறைப்படி இந்தியாவிற்கு சுதந்திர அறிக்கையின் மூலம் தெரிவித்து தங்களது வெளியேற்றத்தினையும் உறுதிப்படுத்தியது.

அந்த சுதந்திர அறிக்கையினை மவுண்ட் பேட்டன் வெளியிட்டார். அதன்படி இந்தியா ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு தனி சுதந்திர நாடாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் இருந்தது.

freedom struggle,mountbatten,march,troop ,சுதந்திர போராட்டம், மவுண்ட்பேட்டன், அணிவகுப்பு, முப்படை

அதன் பிறகு வெள்ளையர்கள் இந்தியாவினை விட்டு வெளியேறிய முதல் ஆண்டு 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம் அன்று டெல்லி கோட்டையில் பிரதமர் கொடியேற்றி மக்களின் நல்வாழ்வின் பொருட்டு நாட்டின் வளமை மற்றும் முன்னேற்றத்திற்கான அறிக்கையினை பற்றி சொற்பொழிவு நிகழ்த்துவார்.

அதனை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெறும். இதுபோன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றி சொற்பொழிவு ஆற்றுவார்கள். மேலும் சுதந்திர போராட்டத்தியாகிகள் பெயரில் விருதுகளும் அறிவிக்கப்படும்.

நாம் இந்தியர்கள் என்று சொல்வதை நம் நாட்டில் உள்ள அனைவரும் பெருமை கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் நமக்காக செய்த தியாகங்களை இந்த சுதந்திர தினத்தில் எண்ணி அவர்களை மனதில் நினைத்து இந்திய தேசிய கொடியினை சுதந்திர தினத்தன்று நாம் அணிகிறோம்.

Tags :
|