Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் அதிகளவில் தயாரிக்கப்படும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம்

சீனாவில் அதிகளவில் தயாரிக்கப்படும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம்

By: Nagaraj Wed, 22 June 2022 00:41:55 AM

சீனாவில் அதிகளவில் தயாரிக்கப்படும் ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம்

சீனா: சீனாவில் ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மிக் ரக போர் விமானங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய விமானப்படையிலும் அந்த ரக போர் விமானங்கள் அதிகம் இருக்கின்றன.

இந்தச் சூழலில், சீனாவின் செங்டு ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் (சிஏசி) மிக்-21 விமானத்துடைய வடிவமைப்பின் அடிப்படையில் ஜே-7 ஒற்றை எஞ்சின் கொண்ட இலகுரக போர் விமானத்தை வடிவமைத்து தயாரித்துள்ளது. ஆனால் இது உண்மையான விமானம் இல்லை. ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போர் விமானம் ஆகும்


toy,aircraft,remote control,manufacturing,china,russia ,பொம்மை, விமானம், ரிமோட் கண்ட்ரோல், உற்பத்தி, சீனா, ரஷ்யா


இந்த விமானங்களானது சீனாவில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த பொம்மை விமானங்களை வெளிநாடுகளுக்கு அதிகமாக அனுப்ப வேண்டுமென சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக் மட்டுமின்றி சுகோய் ரக போர் விமானங்களைப் போலவும் சீனாவில் பொம்மை விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ரிமோட்-கண்ட்ரோல்டு பொம்மைகளின் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவரான Zhejiang Zhiyang Shiye Ltd இன் விற்பனை மேலாளர் வாங் சென் கூறுகையில், 'இந்த விமானங்களுக்கான சர்வதேச ஆர்டர்கள் கடந்த வருடம் முதல் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து 20 முதல் 30%வரை ஆர்டர்கள் வருகின்றன' என்றார்.

Tags :
|
|