Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா விபத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறமையாக செயல்பட்டனர்

ஒடிசா விபத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறமையாக செயல்பட்டனர்

By: Nagaraj Sat, 03 June 2023 7:51:55 PM

ஒடிசா விபத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறமையாக செயல்பட்டனர்

ஒடிசா: திறம்பட மீட்பு பணி... ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் திறம்பட செய்து முடித்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார்.

7 தேசிய பேரிடர் மீட்பு குழு, 5 ஒடிசா மாநில மீட்பு குழு, 24 தீயணைப்பு படை வீரர்கள் குழு, உள்ளூர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், உடல்களை அடையாளம் கண்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்திற்குள்ளான பகுதியில் கவிழ்ந்துக் கிடக்கும் பெட்டிகளுக்குள் மோப்ப நாய்கள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

advanced care,hospital,ambulances,medical camps,accident ,மேல் சிகிச்சை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ்கள், மருத்துவ முகாம்கள், விபத்து

ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெட்டிகள் உருக்குலைந்திருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை கண்டறியும் பணி சிக்கலானதாக மாறியுள்ளது.

நீண்ட தூரத்திற்கு கிடங்கும் பெட்டிகளுக்குள் மோப்ப நாய்களை மீட்புக்குழுவினர் அழைத்துச் சென்று காயமடைந்தவர்களை கண்டறிந்து துரிதமாக மீட்டு வருகின்றனர். மீட்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக 30 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேல்சிகிச்சை தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் 60 ஆம்புலன்ஸ்களும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

Tags :