Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

By: Karunakaran Fri, 07 Aug 2020 1:30:44 PM

புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கவே தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங்கை வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், பல ஆண்டுக்கு ஆய்வுக்குப் பிறகே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. அனைத்துத் தரப்புகளின் கருத்துகல்ளை கேட்டபிரகே புதிய கல்விக் கொள்கை இறுதி செய்யப்பட்டட்து. புதிய கல்விக் கொள்கையில் எந்தப் பாகுபாடும் இல்லை. கல்விக் கொள்கையை அமல்படுத்துவது சவாலான பணியாக இருக்கும் என்று கூறினார்.

national education policy,foundation,new india,prime minister modi ,தேசிய கல்வி கொள்கை, அடித்தளம், புதிய இந்தியா, பிரதமர் மோடி

இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க, வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி. எதிர்காலத்துக்கு இளைஞர்கள் தயாராக உள்ளதாகவும்,ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்லும். மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இது அமைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர், முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. அதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தயாராக இருக்க வேண்டும். கல்வியின் சிறந்த நோக்கமே மனிதர்களை உருவாக்குவது தான் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால் நமது வேர்களை மறக்கக் கூடாது என்று கூறினார்.

Tags :