Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய நெடுஞ்சாலை துறை ஆனது சுங்க சாவடி அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல் அறிவுறுத்தல்கள் வெளியீடு

தேசிய நெடுஞ்சாலை துறை ஆனது சுங்க சாவடி அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல் அறிவுறுத்தல்கள் வெளியீடு

By: vaithegi Wed, 11 Oct 2023 2:38:59 PM

தேசிய நெடுஞ்சாலை துறை ஆனது சுங்க சாவடி அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல் அறிவுறுத்தல்கள் வெளியீடு

சென்னை: இனி சண்டைக்கு வேலை இல்லை ..தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நாடு முழுவதும் பல கிலோமீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலம் மக்களின் பயண நேரம் மிகவும் கணிசமான அளவில் குறைந்து கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள சாலைகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு பயணிகளின் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

எனினும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் மற்றும் சுங்க சாவடிகளில் பணியாற்றுபவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் அடிக்கடி எழுந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயணிகள் மற்றும் சுங்க சாவடி ஆபரேட்டர்களின் பாதுகாப்பிற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

instructions,customs booth ,அறிவுறுத்தல்கள் ,சுங்க சாவடி


வழிமுறைகள் :

இந்த வழிமுறைகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் சுங்க சாவடி ஆபரேட்டர்களின் சிரமங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி சுங்க சாவடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களையும் பயணிகளையும் திறமையாக நிர்வகிப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணைய பிராந்திய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
சுங்க வரி வசூல் முகவர் தங்கள் பொறுப்புகளை சரியாக செய்வதை வட்டார அலுவலகங்கள் கண்காணிக்க வேண்டும்.

சுங்க சாவடி ஊழியர்கள் தங்கள் பெயருடன் NHAI இணைந்து சீருடைகளை அணிந்து கொள்ள வேண்டும். வன்முறை சம்பவங்களின் போது சுங்க சாவடி ஆபரேட்டர்கள் மட்டுமே அதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
பயணிகள் யாரேனும் தவறாக நடந்து கொண்டால் லேன் மேற்பார்வையாளர்கள் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
மேலும் சுங்க சாவடி ஆப்ரேட்டர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு கோப மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச் சாவடிகளில் உள்ள பணியாளர்களுக்கும் இந்த பயிற்சிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Tags :