Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 ஆண்டுகளுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது - தேவேந்திர பட்னாவிஸ்

2 ஆண்டுகளுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது - தேவேந்திர பட்னாவிஸ்

By: Karunakaran Wed, 24 June 2020 1:00:30 PM

2 ஆண்டுகளுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது - தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. கூட்டணி ஆட்சி அமைவதற்கு முன் சிவசேனா பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது. அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா பாஜக கூட்டணி பிரிந்தது. தற்போது மகாராஷ்டிரா முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி வகிக்கிறார். பாஜக அங்கு எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், 2 ஆண்டுகளுக்கு முன் நான் முதல்-மந்திரியாக இருந்த போது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் விரும்பியது என்று தெரிவித்துள்ளார்.

devendra patnais,nationalist congress,bjp,maharastra ,தேவேந்திர பட்னாவிஸ்,தேசியவாத காங்கிரஸ்,பாஜக,மஹாராஷ்டிரா

இதுகுறித்து அவர், மகாராஷ்டிராவில் புதிதாக அரசியல் சமன்பாடு எதுவும் இல்லை. அரசாங்கத்தை மாற்றுவதோ அல்லது இந்த அரசை கவிழ்ப்பதோ எங்களது நிகழ்ச்சி நிரல் அல்ல. அரசாங்கம் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். 2 ஆண்டுகளுக்கு முன் நான் முதல்-மந்திரியாக இருந்த போது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸுடன் ஆலோசனைகள் நடந்தன. ஆனால் எங்களது தலைவர்கள் சிவசேனா உடனான உறவை துண்டிக்க மாட்டோம் என்று கூறியதால், கூட்டணி பேச்சு தடைபட்டு போனது என்று கூறியுள்ளர்.

மேலும் அவர், தற்போது இந்த அரசாங்கத்தைப் பற்றி எந்த மதிப்பீடும் செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. இது கேள்விகளை எழுப்ப வேண்டிய சரியான நேரம். அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய நேரம்.பாஜக பிரதான எதிர்க்கட்சியாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|