Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வுக்கான முடிவுகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் .. தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கான முடிவுகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் .. தேசிய தேர்வு முகமை

By: vaithegi Wed, 31 Aug 2022 1:40:12 PM

நீட் தேர்வுக்கான முடிவுகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் .. தேசிய தேர்வு முகமை

இந்தியா: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இதில் தமிழகத்தில் சென்னை , கோவை , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , மதுரை , நாகர்கோவில் , நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

national examination agency,neet exam , தேசிய தேர்வு முகமை,நீட் தேர்வு

இந்தியா முழுவதும் 497 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இத்தேர்வு எழுத 1.41 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அத்துடன் இத்தேர்வை 90% பேர் எழுதியுள்ளனர். மேலும் முதல் முறையாக நீட் தேர்விற்கு மொத்தமாக 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் 95% பேர் தேர்வை எழுதியுள்ளனர்.

இதை தொடர்ந்து இத்தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் காத்திருந்த வண்ணம் உள்ளனர். மேலும் இந்த தேர்விற்குரிய தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான தேதி குறித்த அறிவிப்பை தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். அத்துடன் இதற்கான விடைக்குறிப்புகளையும் தற்போது தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Tags :