Advertisement

இலங்கையில் புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது

By: Karunakaran Thu, 13 Aug 2020 10:23:24 AM

இலங்கையில் புதிய மந்திரிசபை நேற்று பதவி ஏற்றது

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்தா ராஜபக்சே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

அதன்பின், மகிந்தா ராஜபக்சே கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க மந்திரிகளை நியமித்தார். கண்டி நகரில் நேற்று புதிய மந்திரிசபையின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதிபர் ராஜபக்சே புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

new cabinet,sri lanka,rajapaksha,ministers ,புதிய அமைச்சரவை, இலங்கை, ராஜபக்ஷ, மந்திரிகள்

ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மந்திரிசபையில் இடம்பெற்று உள்ளனர். மந்திரிசபையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமான் ஆகிய 4 தமிழர்கள் இடம்பெற்று உள்ளனர். இவர்களில் கேபினட் மந்திரிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில் துறையும், அலி சப்ரிக்கு நீதியியல் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

ராஜாங்க மந்திரிகளான சதாசிவம் வியாழேந்திரனுக்கு தபால் சேவை, வெகுஜன ஊடகங்கள் அபிவிருத்தி இலாகாவும், ஜீவன் தொண்டமானுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகிந்தா ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே, 2010-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் தற்போது முதன் முதலாக மந்திரியாகியுள்ளார்.

Tags :