Advertisement

இந்தியாவிலும் கால் பதித்து விட்டதா புதிய கொரோனா

By: Nagaraj Sun, 27 Dec 2020 12:55:34 PM

இந்தியாவிலும் கால் பதித்து விட்டதா புதிய கொரோனா

இந்தியாவிலும் புதிய கொரோனாவா?... லண்டனில் இருந்து உத்தரபிரதேசம் வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் புதிய கொரோனா வைரஸ் கால் பதித்து இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுதான் இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெற்று, பரவலும், உயிரிழப்புகளும் கணிசமாக குறையத் தொடங்கி உள்ளது.

இந்த தருணத்தில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் வி.யு.ஐ. 202012/01, இந்தியாவிலும் கால் பதித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டுள்ளதால் ‘சூப்பர் ஸ்பிரெடர்’ என அழைக்கப்படுகிறது.

இது கொத்து, கொத்தாக மக்களுக்கு பரவுகிற தன்மையை கொண்டிருக்கிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து உத்தரபிரதேச மாநிலம், மீரட் வந்துள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரில் ஒரு தம்பதியர், அவர்களின் குழந்தை என 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

new corona,vulnerability,london,next door ,புதிய கொரோனா, பாதிப்பு, லண்டன், பக்கத்து வீட்டினர்

அதுமட்டுமல்ல, மீரட் டி.பி. நகரில் தங்கியுள்ள அந்த தம்பதியரின் பெற்றோர், அண்ணிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 9 நபர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது அங்கு சுகாதார துறையினரிடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது புதிய கொரோனா வைரசா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி மீரட் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அகிலே‌‌ஷ் மோகன் கூறியதாவது:

டிசம்பர் 9-ந் தேதிக்கு பின்னர் 44 பேர் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில் 12 பேர் நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். எஞ்சிய 32 பேரின் கொரோனா பரிசோதனை அறிக்கைகள் வந்தன.

இதில் 14-ந் தேதி லண்டனில் இருந்த நாடு திரும்பிய ஒரு தம்பதியருக்கும், அவர்களது குழந்தைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனே அவர்களது குடும்ப உறுப்பினர்களையும், பக்கத்து வீட்டினரையும் பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தம்பதியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை நடத்தியதில், அவர்களது வயதான பெற்றோருக்கும், அண்ணிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. பெற்றோர் உடனடியாக டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டனர். கண்காணிப்பில் வைக்கப்பட்ட அந்த தம்பதியரின் பக்கத்து வீட்டினர் 9 பேருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|