Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது

இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது

By: Karunakaran Mon, 14 Sept 2020 6:01:48 PM

இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளது

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 3000-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி நாளை முதல் ஆறு முக்கிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது 30 பேருக்கு அனுமதி, பப்புகளில் ஒன்றாக 6 பேர் மட்டுமே, பார்க்குகளிலும் அதே போன்று 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி. அதே சமயம் வீடுகளில் 8 பேருக்கு மேல், வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடக் கூடாது, பொதுவெளியில் வெகுஜன் மக்கள் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

new rules,ukmsix rules,fined ,புதிய விதிகள், இங்கிலாந்து, ஆறு விதிகள், அபராதம்

இந்த 6 விதிகள் பெரிய குடும்பங்களுக்கு ஒரு சில விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. வேலைகளின் போது 6-க்கும் மேற்பட்டோர், பள்ளிகளில் கல்வி நோக்களுக்காக 6-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்து முழுவதிலும் மாறுபடும்.

இந்த விதிகள் எதிர் வரும் காலம் வரை இருக்கும். அதாவது கிறிஸ்துமஸிற்கு முன்பு இதை நாங்கள் திரும்ப பெற முடியும் என்று நம்புவதாக சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார். நாளை முதல் அமுலுக்கு வரும் இந்த விதிமுறைகளை மீறினால் முதலில் 100 பவுண்ட் அபராதம், அதன் பின் அதன் தொடர்ச்சியாக அபராதம் செலுத்த நேர்ந்தால், அது 3,200 பவுண்ட் வரை செலுத்த நேரிடும்.

Tags :