Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ட்விட்டரில் வந்துள்ள புதிய அப்டேட்... அப்பீஷியல் என்ற வார்த்தை வருமாம்

ட்விட்டரில் வந்துள்ள புதிய அப்டேட்... அப்பீஷியல் என்ற வார்த்தை வருமாம்

By: Nagaraj Thu, 10 Nov 2022 5:29:54 PM

ட்விட்டரில் வந்துள்ள புதிய அப்டேட்... அப்பீஷியல் என்ற வார்த்தை வருமாம்

வாஷிங்டன்: புதிய ட்விட்டர் புளூ சேவையின் தலைவரான எஸ்தர் க்ராஃபோர்ட், அரசாங்கங்கள், நிறுவனங்கள் அல்லது பொது நபர்கள் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகள் மற்ற பயனர்களிடமிருந்து பிரிக்க சாம்பல் நிற "Official" வார்த்தை குறியைப் பெறும் என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்-கின் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெரிபைடு கணக்குகளை கண்டறிய தற்போது புளூ டிக்கை தொடர்ந்து, “Official" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் முக்கிய அரசாங்க நிறுவன தளங்களின் ட்விட்டர் பக்கங்களில் “Official" என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

official,accounts,registration,twitter,company ,அப்பீஷியல், கணக்குகள், பதிவு, டுவிட்டர், நிறுவனம்

இதன்மூலம், எந்த கணக்கு உண்மையானது மற்றும் எது போலியானது என்பதைப் பயனர்கள் புரிந்துகொள்ள உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ட்விட்டர் புளூ சேவையின் தலைவரான எஸ்தர் க்ராஃபோர்ட், அரசாங்கங்கள், நிறுவனங்கள் அல்லது பொது நபர்கள் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்குகள, மற்ற பயனர்களிடமிருந்து பிரிக்க சாம்பல் நிற "Official" வார்த்தை குறியைப் பெறும் என்று கூறினார்.

இதுகுறித்து எஸ்தர் க்ராஃபோர்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “புளூ டிக் மற்றும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட கணக்குகள் கொண்ட @TwitterBlue சந்தாதாரர்களை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று நிறைய பேர் கேட்டனர். அதனால்தான் நாங்கள் ட்விட்டரை கையில் எடுக்கும்போது கணக்குகளைத் தேர்ந்தெடுக்க "Official" லேபிளை அறிமுகப்படுத்துகிறோம்” என பதிவிட்டு உள்ளார்.

Tags :