Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

By: Nagaraj Sat, 06 June 2020 09:12:01 AM

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அந்தமான் கடல் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


moderate rain,weather forecast,17 districts,notification ,மிதமான மழை, வானிலை மையம், 17 மாவட்டங்கள், அறிவிப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :