Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கணக்கிட முடியாத இழப்பு... கொரோனா பாதித்து இறந்தவர்களில் 1000 பேரின் பெயர்களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்

கணக்கிட முடியாத இழப்பு... கொரோனா பாதித்து இறந்தவர்களில் 1000 பேரின் பெயர்களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்

By: Nagaraj Mon, 25 May 2020 10:54:57 AM

கணக்கிட முடியாத இழப்பு... கொரோனா பாதித்து இறந்தவர்களில் 1000 பேரின் பெயர்களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்

கொரோனாவால் இறந்த ஆயிரம் பேரின் பெயர்களை முதல்பக்கத்தில் வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ் நேற்று தனது முதல்பக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஆயிரம் பேரின் பெயர்களை குறிப்பிட்டு, 'கணக்கிட முடியாத இழப்பு' என குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்றால் வீட்டில் இறந்தவர்கள் அல்லது சில காரணங்களால் சேர்க்கப்படாதவர்களை கணக்கிடும் போது கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்குமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

corona,dead,1000 people,new york times,publication ,கொரோனா, இறந்தவர்கள், 1000 பேர், நியூயார்க் டைம்ஸ், வெளியீடு

இதுகுறித்து டைம்ஸ் நாளிதழ் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் பேசியுள்ளனர். 'அந்த எண்ணைக் கணக்கிட முயற்சிக்க ஏதாவது வழி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம். இது சிறிய சோர்வை ஏற்படுத்தியது' என டைம்ஸ் கிராபிக்ஸின் உதவி ஆசிரியர் சிமோன் லாண்டன் கூறியுள்ளார்.

அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,000 பேரின் பெயர்களையும், அவர்களது விவரங்களையும் டைம்ஸ் சேகரித்தது. 'இதில் உள்ள 1,000 பேர் எண்ணிக்கையில் உயிரிழந்த ஒரு சதவீதம் பேரை மட்டுமே பிரதிபலிக்கிறார்கள். எதுவும் வெறும் எண்கள் அல்ல' என டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் பெயர், வயது மற்றும் அவர்கள் யார் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டுள்ளனர்.

'தி ஹ்யூமன் டோல்' என்ற கட்டுரையில் மூத்த எழுத்தாளரான டான் பாரி 'கற்பனை செய்து பாருங்கள். புத்தாண்டு தின கொண்டாட்டத்திற்கு இங்கு 1 லட்சம் பேர் கூடியிருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் அமெரிக்க வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.

Tags :
|
|